இங்கிலாந்துடன் இன்று மோதல்: வெற்றிபெறும் முனைப்பில் இந்தியா
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக் கோப்பையின் 11-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தைச் சந்திக்கிறது இந்தியா. இரு அணிகளுமே தங்களின் முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்ற உற்சாகத்தில் களமிறங்குகின்றன. இங்கிலாந்துடன் ஒப்பிடும்போது தோனி தலைமையிலான இந்திய அணி சற்று வலுவாகவே உள்ளது.
பெங்களூர் சின்னசாமி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்த சேவாக், கோலி ஆகியோர் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று தோனி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். ஆனாலும் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், கம்பீர், யுவராஜ் ஆகியோர் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டமுடியும். இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங் வரிசையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது. ஆனால் பந்துவீச்சில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் 5 ஓவர்களை வீசி 53 ரன்களை வாரி வழங்கினார். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போராடியே வென்றது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அப்படி ஒருநிலை உருவாகிவிடக்கூடாது என்பதில் இங்கிலாந்து வீரர்கள் எச்சரிக்கையோடு செயல்படக்கூடும். அந்த அணியின் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ஸ்டிராஸýடன் இணைந்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். எந்த பந்துவீச்சாளர்களையும் துவம்சம் செய்யும் ஆற்றல்படைத்த பீட்டர்சன் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கக்கூடும். மிடில் ஆர்டரில் டிராட், இயன் பெல், ரவி போபரா, பால் காலிங்வுட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.
அதேசமயம் இங்கிலாந்தின் பந்துவீச்சு குறித்து கேப்டன் ஸ்டிராஸ் கவலையடைந்துள்ளார். கத்துக்குட்டி அணியான நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஆன்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் 20 ஓவர்களில் 137 ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் நல்ல பார்மில் உள்ளார்.இரு அணிகளுமே சிறப்பான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய அணி: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், கெüதம் கம்பீர், விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முனாப் படேல், ஸ்ரீசாந்த், பியூஷ் சாவ்லா, அஸ்வின், ஆசிஷ் நெஹ்ரா.
இங்கிலாந்து: ஆன்ட்ரூ ஸ்டிராஸ் (கேப்டன்), கெவின் பீட்டர்சன், ஜொனாதன் டிராட், இயன் பெல், ரவி போபரா, பால் காலிங்வுட், மாட் பிரையர், டிம் பிரெஸ்னன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆன்டர்சன், கிரீம் ஸ்வான், லுக் ரைட், ஜேம்ஸ் டிரட்வெல், மைக்கேல் யார்டி, கிறிஸ் டிரெம்லெட்.
நெஹ்ரா சந்தேகம்: இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெஹ்ரா விளையாடுவது சந்தேகம் என இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். அவர் காயத்திலிருந்து 80 சதவீதமே குணமடைந்துள்ளார். அதனால் அவர் விளையாடுவது சந்தேகம். முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கியது போலவே, இரண்டாவது ஆட்டத்திலும் சிறப்பாக ஆட முயற்சிப்போம்.
உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் நெருக்கடியின்றி விளையாடுவதற்கு கற்றுக்கொண்டுள்ளோம். இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கமாட்டோம். இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டும் களமிறங்குவது ஆபத்தானது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் நிறைய பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 1 சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்குவது சரியாக இருக்கும் என்று தோனி கூறியுள்ளார்.
சேவாக்கை வீழ்த்த வியூகம்
இந்தியாவின் அதிரடி தொடக்க வீரர் சேவாக்கை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளதாக இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் தெரிவித்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். எங்களை விட இந்தியாவுக்கு அதிக அளவில் நெருக்கடி இருக்கும். அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வோம். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமானதுதான். ஆனாலும் நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்.
எங்களின் தாயகத்தில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருந்தாலும், இந்தியாவில் சிறப்பாக ஆடியதில்லை. எங்களின் பந்துவீச்சு கவலையளிப்பதாக உள்ளது. பந்துவீச்சு மிக முக்கியமானது. சச்சின், சேவாக் ஆகியோர் எங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். சேவாக்கை கட்டுப்படுத்த சில திட்டங்களை வைத்துள்ளோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சேவாக்கை விரைவில் வீழ்த்தாவிட்டால் அவர் வேகமாக ரன் குவித்துவிடுவார். இந்தியாவின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் அவர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியும் என்று ஸ்டிராஸ் கூறியுள்ளார்.
Tags:
விளையாட்டு
11 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி
இலங்கை அணியுடனான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 11 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அந்த அணி உலக கோப்பையில் தொடர்ந்து 7வது முறையாக இலங்கையை வீழ்த்தியது.
கொழும்பு, பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக அகமது ஷெஷாத், முகமது ஹபீஸ் களமிறங்கினர். ஷெஷாத் 13 ரன் எடுத்து பெரேரா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சங்கக்கராவிடம் பிடிபட்டார். ஹபீஸ் 32 ரன் எடுத்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கம்ரான் அக்மல் (39 ரன்) ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் 20.2 ஓவரில் 105 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சற்றே தடுமாறியது. இந்நிலையில், அனுபவ வீரர்கள் யூனிஸ் கான் & மிஸ்பா உல் ஹக் ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 108 ரன் சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். யூனிஸ் கான் 72 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
கடைசி கட்டத்தில் உமர் அக்மல் 10, அப்ரிடி 16, ரசாக் 3 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்தது. அபாரமாக விளையாடிய மிஸ்பா உல் ஹக் 83 ரன் எடுத்து (91 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் பெரேரா, ஹெராத் தலா 2, மேத்யூஸ், முரளிதரன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். உலக கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முரளிதரன் (56 விக்கெட்) 2வது இடத்துக்கு முன்னேறினார். மெக்ராத் (71) முதல் இடத்திலும், வாசிம் அக்ரம் (55) 3வது இடத்திலும் உள்ளனர்.
அடுத்து 50 ஓவரில் 278 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தரங்கா & தில்ஷன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி 14.2 ஓவரில் 76 ரன் சேர்த்தது. தரங்கா 33, தில்ஷன் 41, ஜெயவர்தனே 2, சமரவீரா 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 96 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது.
கேப்டன் சங்கக்கரா & சமரசில்வா ஜோடி 5வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடியது. பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் ஸ்டம்பிங், கேட்ச் மற்றும் ரன் அவுட் வாய்ப்புகளை வீணடித்தனர். சங்கக்கரா 49, சமரசில்வா 57 ரன் எடுத்தனர்
இறுதியில் இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்தது. உலக கோப்பையில் அந்த அணி பாகிஸ்தானுடன் 7 முறை மோதி எல்லா ஆட்டத்திலும் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்தது. உலக கோப்பையில் அந்த அணி பாகிஸ்தானுடன் 7 முறை மோதி எல்லா ஆட்டத்திலும் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ÍÚLÖŸ ÚTÖŸ|
TÖfÍRÖÁ
ALU‰ ÙcNÖ† (p) NjLeLWÖ (‘) ÙTÚWWÖ 13
˜LU‰ a’Í (WÁ-A°y) 32
L•WÁ AeU¥ (ÍP•‘j) NjLeLWÖ (‘) ÙaWÖ† 39
ïÂÍLÖÁ (p) Ù^VYŸ†RÚ] (‘) ÙaWÖ† 72
–ÍTÖ E¥-ae (SÖy-A°y) 83
EUŸ AeU¥ (p) ‡¥cÁ (‘) ˜W¸RWÁ 10
A¡z (p) ‡¥cÁ (‘) ÚU†ïÍ 16
A‰¥ WNÖe (p) N (L“ÚLRWÖ) (‘) ÙTÚWWÖ 3
GeÍzWÖ 9
ÙUÖ†R• (50 KYŸL¸¥ 7 «eÙLy|eh) 277
«eÙLy ®²op: 1-28, 2-76, 3-105, 4-213, 5-238, 6-267, 7-277
T‹‰ ®or «YW•
hXÚNLWÖ 10-1-64-0
‡NWÖ ÙTÚWWÖ 9-0-62-2
ÚU†ïÍ 10-0-56-1
˜W¸RWÁ 10-0-35-1
ÙaWÖ† 10-0-46-2
‡¥cÁ 1-0-10-0
CXjÛL
RWjLÖ (p) A¡z (‘) ˜LU‰ a’Í 33
‡¥cÁ (‘) A¡z 41
NjLeLWÖ (p)ALU‰ ÙcNÖ† (‘) A¡z 49
Ù^VYŸ†RÚ] (‘) AeRŸ 2
NUW®WÖ (ÍP•‘j) AeU¥ (‘) A¡z 1
NUWp¥YÖ (ÍP•‘j) AeU¥ (‘) A‰Ÿ WhUÖÁ 57
ÚU†ïÍ (p) ALU‰ ÙcNÖ† (‘) A¡z 18
ÙTÚWWÖ (‘) AeRŸ 8
hXÚNLWÖ(p) EUŸAeU¥(‘) EUŸh¥ 24
ÙaWÖ† (SÖy-A°y) 4
˜W¸RWÁ (SÖy-A°y) 0
GeÍzWÖ 29
ÙUÖ†R• (50 KYŸL¸¥ 9 «eÙLy|eh) 266
«eÙLy ®²op: 1-76, 2-88, 3-95, 4-96, 5-169, 6-209, 7-232, 8-233, 9-265
T‹‰ ®or «YW•
AeRŸ 10-0-42-2
A‰¥ WNÖe 5-1-23-0
EUŸh¥ 9-0-60-1
˜LU‰ a’Í 6-0-33-1
A¡z 10-0-34-4
A‰Ÿ WhUÖÁ 10-1-63-1
TÖfÍRÖÁ
ALU‰ ÙcNÖ† (p) NjLeLWÖ (‘) ÙTÚWWÖ 13
˜LU‰ a’Í (WÁ-A°y) 32
L•WÁ AeU¥ (ÍP•‘j) NjLeLWÖ (‘) ÙaWÖ† 39
ïÂÍLÖÁ (p) Ù^VYŸ†RÚ] (‘) ÙaWÖ† 72
–ÍTÖ E¥-ae (SÖy-A°y) 83
EUŸ AeU¥ (p) ‡¥cÁ (‘) ˜W¸RWÁ 10
A¡z (p) ‡¥cÁ (‘) ÚU†ïÍ 16
A‰¥ WNÖe (p) N (L“ÚLRWÖ) (‘) ÙTÚWWÖ 3
GeÍzWÖ 9
ÙUÖ†R• (50 KYŸL¸¥ 7 «eÙLy|eh) 277
«eÙLy ®²op: 1-28, 2-76, 3-105, 4-213, 5-238, 6-267, 7-277
T‹‰ ®or «YW•
hXÚNLWÖ 10-1-64-0
‡NWÖ ÙTÚWWÖ 9-0-62-2
ÚU†ïÍ 10-0-56-1
˜W¸RWÁ 10-0-35-1
ÙaWÖ† 10-0-46-2
‡¥cÁ 1-0-10-0
CXjÛL
RWjLÖ (p) A¡z (‘) ˜LU‰ a’Í 33
‡¥cÁ (‘) A¡z 41
NjLeLWÖ (p)ALU‰ ÙcNÖ† (‘) A¡z 49
Ù^VYŸ†RÚ] (‘) AeRŸ 2
NUW®WÖ (ÍP•‘j) AeU¥ (‘) A¡z 1
NUWp¥YÖ (ÍP•‘j) AeU¥ (‘) A‰Ÿ WhUÖÁ 57
ÚU†ïÍ (p) ALU‰ ÙcNÖ† (‘) A¡z 18
ÙTÚWWÖ (‘) AeRŸ 8
hXÚNLWÖ(p) EUŸAeU¥(‘) EUŸh¥ 24
ÙaWÖ† (SÖy-A°y) 4
˜W¸RWÁ (SÖy-A°y) 0
GeÍzWÖ 29
ÙUÖ†R• (50 KYŸL¸¥ 9 «eÙLy|eh) 266
«eÙLy ®²op: 1-76, 2-88, 3-95, 4-96, 5-169, 6-209, 7-232, 8-233, 9-265
T‹‰ ®or «YW•
AeRŸ 10-0-42-2
A‰¥ WNÖe 5-1-23-0
EUŸh¥ 9-0-60-1
˜LU‰ a’Í 6-0-33-1
A¡z 10-0-34-4
A‰Ÿ WhUÖÁ 10-1-63-1
Tags:
விளையாட்டு
நம்பர் பொறிக்கப்படாத பனியன்: ஷேவாக்குக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக், வங்காளதேசத்திற்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 175 ரன்கள் குவித்தார்.
அந்த ஆட்டத்தின் போது ஷேவாக் அணிந்திருந்த பனியனில், நம்பர் எதுவும் இல்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரு வீரர் களத்தில் இருக்கும் போது நம்பர் பொறிக்கப்பட்ட உடையையே அணிய வேண்டும். ஷேவாக் இதனை மீறியதால், இதனை குறிப்பிட்டு அவருக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த ஆட்டத்தின் போது ஷேவாக் அணிந்திருந்த பனியனில், நம்பர் எதுவும் இல்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரு வீரர் களத்தில் இருக்கும் போது நம்பர் பொறிக்கப்பட்ட உடையையே அணிய வேண்டும். ஷேவாக் இதனை மீறியதால், இதனை குறிப்பிட்டு அவருக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஷேவாக்குக்கு ஒதுக்கப்பட்ட எண் 44. அதனை தனது பனியனில் இருந்து நீக்கிவிட்டு நம்பர் ஏதுமின்றி விளையாடி இருக்கிறார். நம்பர் இல்லாமல் விளையாடினால் நிறைய ரன்கள் குவிக்க முடியும் என்ற மூட நம்பிக்கை ஷேவாக்கிடம் உண்டு.
அதே சமயம் அவரை தவிர மற்ற இந்திய வீரர்கள் அனைவரும், எண்கள் பொறிக்கப்பட்ட பனியனையே அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் அவரை தவிர மற்ற இந்திய வீரர்கள் அனைவரும், எண்கள் பொறிக்கப்பட்ட பனியனையே அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
விளையாட்டு
கடாஃபியின் கையைவிட்டு நழுவுகிறது லிபியா: உள்நாட்டுப் போர் மூளும் சூழல்
டுனீசியா, எகிப்துக்கு அடுத்தபடியாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி ஒழியப் போவது நிச்சயமாகிவிட்டது.
அதிபர் மம்மர் கடாஃபியின் 41 ஆண்டுக்கால ஆட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.
லிபிய நாட்டின் கிழக்குப் பகுதி எதிர்ப்பாளர்கள் வசமாகிவிட்டது.ராணுவத் தளபதிகளே கடாஃபியின் ஆட்சி பிடிக்காமல் மக்களோடு சேர்ந்துகொண்டுவிட்டனர்.
லிபியாவின் தூதரக அதிகாரிகள் ஒவ்வொருவராக பதவி விலக ஆரம்பித்துவிட்டனர்.
மம்மர் கடாஃபியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துவிட்டன. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூனும் அறிவித்துவிட்டார்.
தடைகள் விதிக்கப்படும்: முதல் கட்டமாக லிபியா மீது ராணுவ, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அதன் பிறகும் நிலைமை சீரடையவில்லை என்றால் பன்னாட்டுப் படைகள் மூலம் லிபிய ஆட்சியாளர்கள் விரட்டப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
கடாஃபிக்கு விசுவாசமாக இருக்கும் ராணுவத்தினரும் கூலிப்படையினரும் தலைநகர் திரிபோலியில் மக்களைக் கொடூரமாக அடக்கி ஒடுக்குகின்றனர்.
மேற்கிலும் பரவியது கலகம்: அதிபர் கடாஃபிக்கு எதிரான கலகம் லிபிய நாட்டின் மேற்குப் பகுதிக்கும் பரவியது. மக்களுக்கு ஆதரவாகக் களத்தில் இருந்து செயல்படுவோம், கடாஃபி கட்டளை இட்டாலும் மக்களைச் சுடமாட்டோம் என்று ராணுவ அதிகாரிகள் அறிவித்தனர்.
மிசுராடாவில் ராணுவம் சுட்டது: அதே சமயம் திரிபோலிக்கு 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிசுராடா என்ற ஊரில் கடாஃபிக்கு விசுவாசமாக இருக்கும் ராணுவத்தினர் கண்மூடித்தனமாகச் சுட்டதில் ஏராளமானோர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர் என்று பி.பி.சி. தெரிவிக்கிறது.
விலகிய அமைச்சர் கடத்தப்பட்டார்? கடாஃபியின் சர்வாதிகார ஆட்சியின் அடக்குமுறை பிடிக்காமல் பதவியை ராஜிநாமா செய்வதாக உள்துறை அமைச்சர் அப்துல் ஃபதா யூனஸ் அல் அபிதி அறிவித்திருந்தார். அவரைத் தனக்கு விசுவாசமான ராணுவத்தார் மூலம் அதிபர் கடாஃபி எங்கோ கடத்திச் சென்றுவிட்டார் என்பது வியாழக்கிழமைதான் தெரிந்தது. அவர் உயிரோடு இருக்கிறாரா, சித்திரவதை செய்யப்படுகிறாரா அல்லது சுட்டுக்கொன்றுவிட்டார்களா என்று எதுவுமே தெரியவில்லை.
மேஜர் ஜெனரல் மக்களுடன் சேர்ந்தார்: டொப்ருக் என்ற நகரில் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சுலைமான் மெஹ்மூத் என்பவர் கடாஃபியின் பக்கமிருந்து விலகி மக்கள் பக்கம் சேர்ந்துகொண்டுவிட்டார். கடந்த காலத்தில் அவருக்கு விசுவாசமாக இருந்தோம், இப்போது நிலைமை மாறிவிட்டது, கடாஃபி இரக்கமற்ற சர்வாதிகாரி என்று கூறினார் சுலைமான் மெஹ்மூத்.
திரிபோலியில் ராணுவம் ரோந்து: தலைநகர் திரிபோலியில் கடாஃபிக்கு விசுவாசமான ராணுவ வீரர்களும் கூலிப்படையினரும் அச்சமூட்டும் வகையில் நகரில் ரோந்து சுற்றி வருகின்றனர். எவராவது வீதியில் என்ன நடக்கிறது என்று வீட்டிலிருந்தபடி எட்டிப்பார்த்தால்கூட அழைத்துச் செல்கின்றனர். வீட்டில் இருப்பவர்கள் கெஞ்சினாலும் அடித்து இழுத்துச் செல்கின்றனர். நீ அதிபருக்கு விசுவாசியா, துரோகியா என்று கேட்கின்றனர்.
தகவல் தொடர்பு துண்டிப்பு: லிபிய மக்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களுடைய உறவினர்களுடன்கூட பேச முடியாதபடிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. தொலைபேசி, கைபேசி, இணையதளம் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால் லிபியாவில் இருக்கும் தங்களுடைய உறவினர்களும் நண்பர்களும் என்ன ஆனார்கள் என்றுகூட தெரியாமல் மற்றவர்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
விமான நிலையங்களில் மக்கள் வெள்ளம்: நிலைமை மேலும் மோசமாவதற்குள் லிபியாவைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ஒரே சமயத்தில் புறப்பட்டுவிட்டனர். இதனால் விமான நிலையங்களில் விமானங்கள் வருவதும் புறப்படுவதுமாகவே இருக்கின்றன. ஏராளமான நாடுகள் தங்கள் நாட்டவரை அழைத்து வர விமானங்களையும் கப்பல்களையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.
ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை தங்கள் நாட்டவர்களை வெளியேற்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவும் சீனாவும் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. ஐரோப்பிய யூனியன், தென் கொரியா, அமெரிக்கா ஆகியவையும் இதைத் தொடங்கிவிட்டன.
1,000 பேர் சாவு: கடந்த 10 நாள்களாக நடைபெற்றுவரும் கிளர்ச்சியில் 300 பேர் இறந்திருப்பதாக லிபிய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இத்தாலி நாட்டு வெளியுறவு அமைச்சர் பிராங்கோ பிராட்டினி கூறுகிறார்.
பெங்காசியிலிருந்து பரவியது: கடாஃபியை எதிர்ப்பவர்களின் கிளர்ச்சி பெங்காசி நகரில்தான் முதலில் தீவிரமாகத் தொடங்கியது. இப்போது அது அதைவிட தீவிரமாக பிற ஊர்களுக்கும் பரவி வருகிறது. தொலைபேசி, கைபேசி, இணையதள தொடர்புகள் அற்றுப்போயிருந்தாலும் அரசை எதிர்ப்பவர்கள் தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு ஊர் ஊராகச் சென்று மக்களை அரசுக்கு எதிராகப் போரிடுமாறு அறைகூவல் விடுக்கின்றனர்.
பெங்காசி, டொப்ருக் நகரங்களில் அரசு எதிர்ப்பாளர்கள் கடாஃபிக்கு கடைசி காலம் வந்துவிட்டது என்று கூறி பட்டாசு வெடித்து தேசியக் கொடிகளைக் கையில் வைத்துக்கொண்டு உற்சாகக் கூத்தாடுகின்றனர். பாட்டுப்பாடி நடனம் ஆடுகின்றனர்.
ஒபாமா தீவிர ஆலோசனை: கடாஃபி தானாகப் பதவி விலகட்டும் என்று காத்திராமல் ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்துவது சர்வதேசக் கடமை என்று கருதுகிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இது தொடர்பாக முதலில் அமெரிக்க அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்திவருகிறார். பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஐரோப்பிய யூனியன் போன்ற தோழமை நாடுகளின் தலைவர்களுடைய கருத்துகளையும் அவர் கேட்டு வருகிறார்.
கடாஃபியின் அடக்குமுறை ஆட்சியை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், சுமுகமாக ஆட்சி மாற்றம் நடைபெற உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வரும் திங்கள்கிழமை ஜெனீவா நகருக்குச் செல்கிறார். அங்கு மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு வெளிநாடுகளின் அமைச்சர்கள் வருகின்றனர். அங்கு லிபிய நிலைமை குறித்துத்தான் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கடாஃபி மகள் பதவி பறிப்பு: ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டப் பிரிவின் நல்லெண்ணத் தூதராக கடாஃபியின் மகள் ஆயிஷா அல் கடாஃபி நியமிக்கப்பட்டிருந்தார். சமீபத்திய நடவடிக்கைகளுக்குப் பிறகு அவரை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டது ஐ.நா. மன்றம்.
Tags:
உலகம்
வெற்றியுடன் தொடங்கியது தென் ஆப்பிரிக்கா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான உலகக் கோப்பை 7-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 107 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 47.3 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித், பீல்டிங்கைத் தேர்வு செய்தார். வழக்கம்போல் வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தாமல் முதல் ஓவரை ஜோஹன் போத்தாவிடம் கொடுத்தார் ஸ்மித்.
அவரின் முயற்சிக்கு எதிர்பார்த்ததைப் போலவே பலனும் கிடைத்தது. ஆட்டத்தின் 3-வது பந்திலேயே கெயிலை வெளியேற்றினார் போத்தா. அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதன்பிறகு டேவன் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார் டேரன் பிராவோ. ஸ்மித் நிதானமாக ஆட, பிராவோ அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார். அவர் 55 பந்துகளில் அரைசதமடித்தார்.
அணியின் ஸ்கோர் 113 ரன்களை எட்டியபோது பிராவோ 73 ரன்கள் எடுத்து போத்தா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்மித்-பிராவோ ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தது.
அடுத்த ஓவரில் ஸ்மித் 36 ரன்களில் வீழ்ந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சர்வான் 2 ரன்களில் இளம் வீரர் இம்ரான் தாஹிரின் பந்துவீச்சில் வெளியேறினார்.
பின்னர் சந்திரபாலும், டிவைன் பிராவோவும் ஜோடி சேர்ந்தனர். பிராவோ 3 அபார சிக்ஸர்களை விளாசி விருந்து படைத்தார். 37 பந்துகளைச் சந்தித்த பிராவோ 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சந்தர்பால் 31 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. இதனால் அந்த அணி 47.3 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஆம்லா 14 ரன்களிலும், காலிஸ் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்மித் நிதானமாக விளையாட, டிவில்லியர்ஸ் வழக்கம்போல் சரவெடியாய் வெடித்தார். 1 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் அரைசதமடித்தார்.
ஸ்மித் 45 ரன்களில் போôலார்ட் பந்துவீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார். பின்னர் டுமினி களம் புகுந்தார். டிவில்லியர்ஸ்-டுமினி ஜோடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதோடு நேர்த்தியாக விளையாடியது. இதனால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
97 பந்துகளை சந்தித்த டிவில்லியர்ஸ் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் சதமடித்தார். 42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றது. டிவில்லியர்ஸ் 107 ரன்களுடனும், டுமினி 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஸ்கோர் போர்டு மேற்கிந்தியத் தீவுகள்:
கெயில் (சி) காலிஸ் (பி) போத்தா 2 (3)
ஸ்மித் (சி) & (பி) தாஹிர் 36 (57)
டிஎம் பிராவோ எல்பிடபிள்யூ (பி) போத்தா 73 (82)
சர்வான் எல்பிடபிள்யூ (பி) தாஹிர் 2 (10)
சந்தர்பால் (சி) பீட்டர்சன் (பி) தாஹிர் 31 (51)
டிஜே பிராவோ ரன்-அவுட் (மோர்கல், டிவில்லியர்ஸ்) 40 (37)
தாமஸ் (சி) டுமினி (பி) தாஹிர் 15 (26)
போலார்ட் எல்டபிள்யூ (பி) ஸ்டெயின் 0 (1)
டேரன் சமி எல்பிடபிள்யூ (பி) ஸ்டெயின் 0 (4)
பென் (சி) மோர்கெல் (பி) ஸ்டெயின் 6 (8)
ரோச் நாட்-அவுட் 2 (6)
உதிரி: 15
மொத்தம் (47.3 ஓவர்களில் அனைத்துவிக்கெட் இழப்புக்கு) 222
விக்கெட் வீழ்ச்சி: 1-2 (கெயில்), 2-113 (டிஎம் பிராவோ), 3-117 (ஸ்மித்), 4-120 (சர்வான்), 5-178 (டிஜே பிராவோ), 6-209 (சந்தர்பால்), 7-213 (போலார்ட்), 8-213 (தாமஸ்), 9-213 (சமி), 10-222 (பென்)
பந்துவீச்சு:
போத்தா 9-0-48-2
ஸ்டெயின் 7.3-1-24-3
மோர்கெல் 8-0-35-0
காலிஸ் 3-0-21-0
தாஹிர் 10-1-41-4
பீட்டர்சன் 10-0-49-0
தென் ஆப்பிரிக்கா
ஆம்லா (சி) தாமஸ் (பி) ரோச் 14 (15)
ஸ்மித் (பி) போலார்ட் 45 (78)
காலிஸ் (சி) சமி (பி) பென் 4 (7)
டிவில்லியர்ஸ் (நாட்-அவுட்) 107 (105)
டுமினி (நாட்-அவுட்) 42 (53)
உதிரி 11
மொத்தம் (42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு) 223
விக்கெட் வீழ்ச்சி: 1-15 (ஆம்லா), 2-20 (காலிஸ்),3-139 (ஸ்மித்)
பந்துவீச்சு:
பென் 10-0-51-1
ரோச் 8-0-42-1
டிஜே பிராவோ 2.1-0-12-0
சமி 8-0-40-0
போலார்ட் 7.5-0-37-1
கெயில் 6-0-26-0
ஸ்மித் 0.5-0-5-0
Tags:
விளையாட்டு
தென் ஆப்பிரிக்காவுடன் மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்
தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது தென் ஆப்பிரிக்கா..
உலகக் கோப்பையை இதுவரை வென்றதில்லை, இறுதிப் போட்டிக்கும் இதுவரை முன்னேறியதில்லை என்றாலும், இந்த முறை கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது துரதிர்ஷ்டக்கார அணியான தென் ஆப்பிரிக்கா. 1992, 1999, 2007 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளது.
இந்த முறை முதல் ஆட்டத்தை வெற்றியோடு தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்குகிறது கிரீம் ஸ்மித் தலைமையிலான இளம் அணி. அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான காலிஸ் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலம்.
கிரீம் ஸ்மித், ஹசிம் ஆம்லா, ஏ.பி.டிவில்லியர்ஸ், ஜே.பி.டுமினி என மிகச்சிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இவர்கள் எதிரணி பந்து வீச்சாளர்களை பந்தாடும் அசாத்திய திறமை பெற்ற பேட்ஸ்மேன்கள் என்றே சொல்லலாம்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல், வேய்ன் பர்னல் என சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களையும், ஜோஹன் போத்தா, ராபின் பீட்டர்சன் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்களையும் கொண்டுள்ளது.
அதேசமயம் எதிரணியான மேற்கிந்தியத் தீவுகள் அணி எப்படி ஆடும் என்று அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது. இளம் வீரர்களுடன் களமிறங்கும் அந்த அணி, கிறிஸ் கெயில், சிவநாராயண் சந்தர்பால், ராம்நரேஷ் சர்வான் ஆகியோரையே பேட்டிங்கில் நம்பியுள்ளது.
கைரன் பொல்லார்டு, கெமர் ரோச், டேரன் பிராவோ, டுவைன் பிராவோ ஆகியோர் அதிரடியாக விளையாடி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியவர்கள். இவர்கள் சிறப்பாக ஆடும் பட்சத்தில் மேற்கிந்தியத் தீவுகள் பெரிய அளவில் ரன் குவிக்க முடியும்.
மேற்கிந்தியத் தீவுகளின் பொல்லார்டு, பிராவோ, கிறிஸ் கெயில் போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர்கள். அவர்கள் இந்திய ஆடுகளங்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் என்பதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை ஆபத்து: தில்லியில் வியாழக்கிழமை மழை பெய்யக்கூடும் என தில்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்யாத பட்சத்தில் இந்த ஆட்டம் தில்லி ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமையும்.
சிறப்பாக விளையாடுவோம்- காலிஸ்: முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம் என்று தென் ஆப்பிரிக்காவின் மூத்த ஆல்ரவுண்டர் காலிஸ் தெரிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்க அணியில் இப்போதுள்ள 15 வீரர்களில் 11 பேர் உலகக் கோப்பையில் விளையாடியதில்லை. ஆனாலும் அது பற்றி கவலையில்லை. சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். எல்லா வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர். சமீப காலங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா சிறப்பாகவே விளையாடி வந்துள்ளது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்றார்
வெற்றியோடு தொடங்க விரும்புகிறோம்-கிறிஸ் கெயில்: முதல் ஆட்டத்தை வெற்றியோடு தொடங்க விரும்புவதாக மேற்கிந்தியத் தீவுகள் தொடக்க வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
பெரோஸ் ஷா கோட்லா மைதானம்
இங்கு ஒருநாள் ஆட்டம் கடைசியாக 2009 டிசம்பரில் நடைபெற்றது. இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டத்தின் போது முதலில் பேட் செய்த இலங்கை வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் காயமடைந்தனர். மோசமான பராமரிப்பே பந்துகள் எகிறியதற்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டம் கைவிடப்பட்டது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்துக்கு ஓராண்டு தடை விதித்தது ஐசிசி. பின்னர் ஐ.சி.சி.யின் ஆய்வுக்குப் பிறகு மைதானத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Tags:
விளையாட்டு
அப்ரிதியின் சுழலில் சுருண்டது கென்யா
கென்யாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிதியின் பந்துவீச்சில் நிலைகுலைந்த கென்ய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அப்ரிதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கென்ய அணி 33.1 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அம்பணத்தோட்டத்தில் புதன்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஹபீஸ் 9 ரன்களிலும், அகமது ஷெஸôத் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தபோதும், கம்ரான் அக்மல்-யூனிஸ்கான் ஜோடி அணியின் சரிவை தடுத்து நிறுத்தியது.
அக்மல் 55 ரன்களும், யூனுஸ்கான் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்தது. இதன்பிறகு வந்த மிஸ்பா உல் ஹக்- உமர் அக்மல் ஜோடி கென்யாவின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. அணியின் ஸ்கோர் 273 ரன்களை எட்டியபோது மிஸ்பா 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்சர்கள், 1 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். 52 பந்துகளைச் சந்தித்த உமர் அக்மல் 1 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. கென்யா தரப்பில் ஒடோயோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அப்ரிதி அசத்தல்318 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது கென்யா. தொடக்க ஆட்டக்காரர்கள் மெüரிஸ் அவ்மா 16 ரன்கள், வாட்டர்ஸ் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் ஒபுயா சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். அவர் 47 ரன்கள் எடுத்திருந்தபோது அப்ரிதியின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க கென்யா சரிவுக்குள்ளானது. பின்னர் வந்த மிஸ்ரா 6, படேல் 0, கமாண்டே 2, ஒடோயோ, ஒடியாம்போ, கோச்சே ஆகியோர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க 33.1 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது கென்யா. பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் அப்ரிதி 8 ஓவர்கள் வீசி 16 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உதிரிகளை வாரி வழங்கிய கென்யா
கென்ய பந்துவீச்சாளர்கள் 46 உதிரி ரன்களை வாரி வழங்கினர். இதில் 37 வைடுகளும், 6 நோ பால்களும், 3 லெக் பை ரன்களும் அடங்கும்.
ஸ்கோர் போர்டு பாகிஸ்தான்
முகமது ஹபீஸ் (சி) வாட்டர்ஸ் (பி) ஒடீனோ 9 (20)
அகமது ஷெஸôத் (சி) கமாண்டே (பி) ஒடோயோ 1 (18)
கம்ரான் அக்மல் (ஸ்ட்) அவ்மா (பி) கோச்சே 55 (67)
யூனிஸ் கான் எல்பிடபிள்யூ (பி) டிக்கோலோ 50 (67)
மிஸ்பா உல் ஹக் (சி) ஒடீனோ (பி) கமாண்டே 65 (69)
உமர் அக்மல் (சி) ஒபுயா (பி) ஒடோயோ 71 (52)
அப்ரிதி எல்பிடபிள்யூ (பி) ஒடோயோ 7 (4)
அப்துல் ரசாக் (நாட் அவுட்) 8 (6)
அப்துர் ரெஹ்மான் (நாட் அவுட்) 5 (3)
உதிரி 46மொத்தம் (50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு)
317விக்கெட் வீழ்ச்சி: 1-11 (ஹபீஸ்), 2-12 (ஷெஸôத்), 3-110(கம்ரான்), 4-155 (யூனிஸ் கான்), 5-273 (மிஸ்பா), 6-289 (உமர்), 7-289 (அப்ரிதி).
ஒடோயோ 7-2-41-3
ஒடீனோ 9-1-49-1
ஒடியாம்போ 7-0-65-0
கோச்சே 10-0-46-1
கமாண்டே 7-0-64-1
டிக்கோலோ 9-0-44-1
கென்யா
அவ்மா (சி) கம்ரான் (பி) உமர் குல் 16 (37)
வாட்டர்ஸ் ரன் அவுட் (உமர் அக்மல்) 17 (31)
ஒபுயா (சி) ஷெஸôத் (பி) அப்ரிதி 47 (58)
டிக்கோலோ (பி) அப்ரிதி 13 (33)
மிஸ்ரா எல்பிடபிள்யூ (பி) அப்ரிதி 6 (16)
ஆர்.படேல் (சி) உமர் அக்மல் (பி) ஹபீஸ் 0 (6)
கமாண்டே எல்பிடபிள்யூ (பி) அப்ரிதி 2 (3)
ஒடோயோ எல்பிடபிள்யூ (பி) அப்ரிதி 0 (8)
ஒடியாம்போ ரன் அவுட் (யூனிஸ் கான்) 0 (6)
கோச்சே (பி) உமர் குல் 0 (1)
ஒடீனோ நாட் அவுட் 0 (1)
உதிரி 11மொத்தம் (33.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 112
பந்துவீச்சு
அக்தர் 5-1-10-0
அப்துல் ரசாக் 5-1-23-0
உமர் குல் 4.1-0-12-2
அப்துர் ரெஹ்மான் 7-1-18-0
அப்ரிதி 8-3-16-5
முகமது ஹபீஸ் 4-1-26-1
Tags:
விளையாட்டு
கிளர்ச்சியில் குதித்தார் லிபிய உள்துறை அமைச்சர்
லிபியாவில் 41 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் அதிபர் மம்மர் கடாஃபிக்கு எதிராக அவரது மகனின் நெருங்கிய கூட்டாளியும், உள்துறை அமைச்சருமான அப்தெல் ஃபதா வெகுண்டு எழுந்துள்ளார். அவர் தனது பதவியை துறந்து கிளர்ச்சியில் குதித்துள்ளார்.அப்தெல் ஃபதா பதவியை துறந்து கிளர்ச்சியில் குதித்ததை அல் ஜஸீரா தொலைக்காட்சியில் புதன்கிழமை தோன்றி அறிவித்தார். அப்போது அவர் ராணுவ சீருடை அணிந்திருந்தார். மம்மர் கடாஃபியின் சர்வாதிகாரப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வெடித்துள்ள கிளர்ச்சியை தான் முழுவதும் ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களை ராணுவத்தையும், கூலிப்படையையும் ஏவிவிட்டு சுட்டுத்தள்ளி மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்ளும் கடாஃபியை கண்டித்து அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலீல் செவ்வாய்க்கிழமை பதவியைத் துறந்தார். கடாஃபின் கொடுங்கோல் செயலைக் கண்டித்து அந்நாட்டின் ஏராளமான தூதர்களும், வெளியுறவு அதிகாரிகளும் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். மம்மர் கடாஃபியின் மகனின் மூத்த உதவியாளர் யூசெஃப் சவானியும் பதவியை உதறிவிட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அப்தெல் ஃபதாவும் பதவியை துறந்திருப்பதன் மூலம் கடாஃபிக்கான எதிர்ப்பு வலுவடைந்துள்ளது.லிபியாவில் தற்போது நிலவும் சூழலை பார்க்கும்போது நாடே சீர்குலைந்துள்ளது தெளிவாகிறது. அமைச்சர்களும், தூதர்களும் பதவியை துறந்துள்ளது நாடு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையே காட்டுகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடாஃபி ஆயுதத்தை தூக்குவதை பிரிட்டன் கண்டிக்கிறது என்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் கூறினார்.கடாஃபி அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார். லிபியாவுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் குரல் கொடுத்துள்ளன.தனது குடும்பத்தின் நலனுக்காகக் கோடிக்கணக்கான மக்களை அடக்கி ஆண்ட, தொடர்ந்து ஆள முயலும் கடாஃபியின் செயலை பெரு வன்மையாகக் கண்டித்துள்ளது. லிபியாவுடனான ராஜீய உறவை முறித்துக் கொண்டுள்ளது. அந்நாட்டுடனான ராஜீய உறவை முறித்துக்கொண்டுள்ள முதல் நாடு பெரு.கடாஃபிக்கு எதிராக 22 அரேபிய நாடுகளும் குரல் எழுப்பியுள்ளன. தமது குடிமக்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் கடாஃபி மதிப்பளிக்க வேண்டும் என்று அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன. கிளர்ச்சியாளர்களுக்கு முறையாக பதில் அளிக்கும்வரை அரபு நாடுகள் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள லிபியாவை அனுமதிக்க முடியாது என்றும் அந்நாடுகள் தெரிவித்துள்ளன.
Tags:
உலகம்
கென்யாவை வீழ்த்தியது நியூசிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கென்யா 69 ரன்களில் சுருண்டது. 8 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டிய நியூசிலாந்து மிக எளிதாக வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து - கென்யா அணிகள் மோதின.
முதலில் ஆடிய கென்யா 23.5 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய நியூஸிலாந்து 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது. முன்னதாக டாஸ் வென்ற கென்யா முதலில் பேட் செய்தது. ஒபான்டா, வாட்டர்ஸ் ஆகியோர் முதலில் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். 6 ஓவரின் கடைசி பந்தில் ஒபான்டா ஆட்டமிழந்தார். அவர் 6 ரன்களுடன் வெளியேறினார்.
அடுத்து வந்து ஒபுயாவும் நிதானமாக ஆடினார். 12-வது ஓவரில் 16 ரன்களில் வாட்டர்ஸ் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ரகிப் படேல் ( 16 ரன்கள், அவுட் இல்லை) தவிர பின் வந்தவர்கள் யாரும் ஒன்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. 3 வீரர்கள் ரன் ஏதுமின்றி வெளியேறினர். கேப்டன் கமான்டே 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் 23.5 ஓவர்களில் கென்யா 69 ரன்களுக்குள் சுருண்டது. நியூசிலாந்தின் பென்னட் (4 விக்கெட்), ஜோக்கப் ஓரம், செüதி (தலா 3 விக்கெட்) ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசினர்.
70 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்தின் குப்தில், நாதன் மெக்குல்லம் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்கம் முதலே அடித்து ஆடி ரன் சேர்த்தனர். இதனால் 8 ஓவர்கள் முடிவில் 72 ரன்களைச் சேர்ந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து எளிதாக வென்றது. இந்த ஆட்டத்தில் மொத்தமே 31.5 ஓவர்கள்தான் வீசப்பட்டன. ஆட்டம் சுமார் இரண்டரை நேரம் மட்டுமே நடைபெற்று முடிவடைந்தது.
குப்தில் 39 ரன்களும், மெக்குல்லம் 26 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக பென்னட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றி தங்கள் அணிக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளதாக நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
25-ம் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
கென்யா தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் 23-ம் தேதி நடைபெறவுள்ளது.
Tags:
விளையாட்டு
விண்வெளி மாசு சுத்தம் செய்யப்படுகிறது , ஒரு பொருளினால்
செப்டெம்பர் 2009 ல் ஒரு எந்திர கை போன்ற ஒன்றை சர்வதேச விண்வெளி நிலையத்தில் அடிபகுத்யில் பொருத்தி உள்ளனர் . இது ஒரு ஜப்பனியிய விண்வெளி சரக்குக் கப்பல் மூலம் இது கொண்டு செல்லப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டது .இதனால் விண்வெளி இருந்து பலனில்லாத பொருள்களை அப்புறப்படுத்த பயன்படுத்தப்படுகிறது . இது ஒரு முறை மட்டுமே முயற்சி செய்து பார்கபட்டது. இந்த வருடம் ஜனுவரி 27 ம் தேதி ஜப்பனியிய விண்வெளி நிறுவனம் JAXA வானது HTV2 உடன் இணைந்து இரண்டாம் முறையாக இந்த முயற்சியை அதன் சுற்று வட்ட பாதயில் முயன்று வெற்றி கண்டுள்ளனர் . விண்வெளிஇல் உள்ள சிதைந்த பொருள்களை மறு சுழற்சி செய்யும் இந்த முன்னேற்றமடைந்த
தொழில்நுட்பத்தில் வெற்றி கண்டுள்ளனர். ஏனனில் அதன் சுற்று வட்ட பாதயில் இருந்து சற்று விலகுமேயானால் வெடித்து சிதறும் வாய்ப்பு மிக அதிகம் . மேலும் 22,000 மனிதர்களினால் உருவாக்கப்பட்ட பொருள்களினால் ஆனது . 10 சென்டிமீட்டர் விலகினால் அது ஒரு விண்வெளி வெடிபோருளாகும் வாய்ப்புள்ளது .
Tags:
விண்வெளி







